ஆட்டோமொபைல்
ஸ்கோடா ஆக்டேவியா

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஆக்டேவியா வெளியீட்டு விவரம்

Published On 2020-04-18 11:22 GMT   |   Update On 2020-04-18 11:22 GMT
ஸ்கோடா நிறவனத்தின் புதிய ஆக்டேவியா காரின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க அதிகப்படியான வியாபாரங்கள் முடங்கியிருக்கின்றன. இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற துறைகளை போன்றே ஆட்டோமொபைல் துறையும் கடும் பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. 

உலகளாவிய நெருக்கடி காரணமாக பெரும்பாலான வாகனங்கள் வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வரிசையில் ஸ்கோடா தனது புதிய ஆக்டேவியா மாடலின் வெளியீட்டை தள்ளிவைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஸ்கோடாவின் புதிய ஆக்டேவியா மாடல் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் சேக் ஹொலிஸ், கொரோனா பாதிப்பு காரணமாக எங்களது திட்டங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆக்டேவியா மாடல் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.



இந்திய சந்தைக்கான ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படலாம். இது 148 பிஹெச்பி, 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும். 

புதிய ஆக்டேவியா மாடலின் உள்புறம் முற்றிலும் புதிய கேபின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் இரண்டு ஸ்போக் கொண்ட அலாய் வீல், புதிய கண்ட்ரோல் பட்டன், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம். இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்டிரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News