ஆட்டோமொபைல்
ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட்

ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-04-11 10:16 GMT   |   Update On 2020-04-11 10:20 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஃபிளாக்ஷிப் செடான் மாடலின் வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டு, மேம்பட்ட பவர்டிரெயின் மற்றும் புதிய விலையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஸ்கோடா சூப்பர்ப் செடான் மாடல் இந்தியாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

தற்சமயம் இதன் மேம்பட்ட மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு தற்சமயம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மேம்பட்ட முன்புற கிரில், புதிய பம்ப்பர்கள், குரோம் அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம், எல்இடி ஃபாக் லேம்ப்கள், புதிய அலாய் வீல் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் 2020 ஸ்கோடா சூப்பர்ப் மாடலில் மேம்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், மற்றும் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் லெதர் இருக்கைகள், சன்ரூஃப், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.

ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News