ஆட்டோமொபைல்
ஹூண்டாய் க்ளிக் டு பை

ஆன்லைன் மூலம் கார் விற்க புதிய சேவையை துவங்கிய ஹூண்டாய்

Published On 2020-04-10 10:54 GMT   |   Update On 2020-04-10 10:56 GMT
ஹூண்டாய் நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய புதிய சேவையை துவங்கி இருக்கிறது.



ஹூண்டாய் நிறுவனம் புதிதாக க்ளிக் டு பை (Click to Buy) எனும் ஆன்லைன் சேவையை துவங்கி இருக்கிறது. இந்த சேவையிலேயே வாடிக்கையாளர்களின் கேள்வி, சந்தேகங்களுக்கு பதில் அளிக்க இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் நிறுவன வாகனங்களை ஆன்லைனிலேயே வாங்கிக் கொள்ள முடியும். முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி பகுதியில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது.



புதிய ஆன்லைன் சேவை மூலம் எதிர்கால வாகனங்கள் விற்பனையை டிஜிட்டல் முறையில் மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. ஆல்லைன் விற்பனை தளம் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக விற்பனை மையங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கிட முடியும். ஹூண்டாய் கார்களை வாங்குவோருக்கு புதிய தளம் மிக எளிமையாக இருப்பதோடு, பாதுகாப்பான ஒன்றாகவும் இருக்கிறது. ஆன்லைன் தளத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் புதிய கிரெட்டா மற்றும் வெர்னா மாடல்களும் அடங்கும்.
Tags:    

Similar News