ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

2020 விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் ஹைப்ரிட் விவரங்கள் வெளியீடு

Published On 2020-04-08 11:18 GMT   |   Update On 2020-04-08 11:18 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் 2020 விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் ஹைப்ரிட் மாடல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.



மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2020 விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் புதிய பிஎஸ்6 மாடலை விட வித்தியாசமானது ஆகும். தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடல் ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 



இத்துடன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முன்னதாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருந்தது. எனினும், இதன் பெட்ரோல் ஹைப்ரிட் பவர் யூனிட் உடன் மேனுவல் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம். 

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் ஹைப்ரிட் மேனுவல் கியர்பாக்ஸ்: LXi, VXi, ZXi மற்றும் ZXi+ போன்ற ட்ரிம்களில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.

தற்சமயம் மாருதி நிறுவனம் புதிதாக ஜிம்னி மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் மாருதி ஜிம்னி ஐந்து கதவுகள் கொண்ட மாடலாக வெளியாகும் என்றும் இது நெக்சா விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News