ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்

பென்ஸ் ஜிஎல்எஸ் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு

Published On 2020-04-07 11:15 GMT   |   Update On 2020-04-07 11:15 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்எஸ் மாடல் காரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.



மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிஎல்எஸ் எஸ்யுவி மாடலின் டீசரை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. புதிய ஜிஎல்எஸ் எஸ்யுவி அடுத்த இரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசரின் படி புதிய பென்ஸ் ஜிஎல்எஸ் மாடலின் வெளிப்புறத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. டீசரில் புதிய கார் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் காரின் பக்கவாட்டு பகுதியும் காட்டப்பட்டுள்ளது.



புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மாடல் முந்தைய மாடலை விட 77 எம்எம் நீளமும், 22 எம்எம் அகலமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது முந்தைய மாடலை விட நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. புதிய காரில் 22 அங்குல அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. 

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் மாடலில் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 326 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஜி டிரானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News