ஆட்டோமொபைல்
ஜீப்

ஹூண்டாய் வென்யூ மாடலுக்கு போட்டியாக உருவாகும் ஜீப் காம்பேக்ட் எஸ்.யு.வி.

Published On 2020-03-31 11:29 GMT   |   Update On 2020-03-31 11:29 GMT
ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் கார் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் என்ட்ரி லெவல் ஜீப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஜீப் காம்பேக்ட் எஸ்.யு.வி. இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் என்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடல் ரெனகேடு ஆஃப்-ரோடு எஸ்.யு.வி. மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த எஸ்.யு.வி. மாடலில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.



ஆஃப்-ரோடு வசதியை வழங்கும் நோக்கில், புதிய ஜீப் மாடலில் டிரையல் ரேட்டெட் பேட்ஜ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் ஃபியாட் நிறுவனத்தின் 4-வீல் டிரைவ் சிஸ்டம், லோ-ரேஷியோ கியர்பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் ஜீப் பிராண்டின் ஆஃப்-ரோடிங் டி.என்.ஏ. வழங்கப்படுவதோடு, அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையிலான அம்சங்களும் வழங்கப்படும் என ஐரோப்பாவிற்கான ஜீப் நிறுவன விளம்பர பிரிவு தலைவர் மார்கோ பிஜோஸி முன்னதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் புதிய ஜீப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுதவிர பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனமாகவும் இந்த எஸ்.யு.வி. அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News