ஆட்டோமொபைல்
லெக்சஸ் யு.எக்ஸ்.

டாட்டூ போடப்பட்ட உலகின் முதல் கார் இது தான்

Published On 2020-03-19 11:12 GMT   |   Update On 2020-03-19 11:12 GMT
லெக்சஸ் நிறுவனம் டாட்டூ போடப்பட்ட உலகினஅ முதல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



மனிதர்களிடையே டாட்டூ போட்டுக் கொள்ளும் பழக்கம் மிகவும் சாதாரணமான ஒன்று தான். ஆனால் காருக்கு டாட்டூ போடுவதை இதுவரை யாரும் நினைத்திருக்க மாட்டோம்.

இதை சாத்தியப்படுத்தும் வகையில் டாட்டூ போடப்பட்ட உலகின் முதல் காரை லெக்சஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. லெக்சஸ் நிறுவனத்தின் யு.எக்ஸ். காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கு டாட்டூ போடப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கான டாட்டூ வடிவமைப்பினை லண்டனை சேர்ந்த கிளாடியா டி சபே என்ற டாட்டூ கலைஞர் உருவாக்கி இருக்கிறார்.



வெள்ளை நிற காரில் டாட்டூ போடும் ஊசிக்கு பதில் டிரிமெல் ட்ரில் கருவி பயன்படுத்தி டாட்டூ போடப்பட்டு இருக்கிறது. பாரம்பரிய ஜப்பான் நாட்டு கலையை பரைசாற்றும் வகையில் டாட்டூ வடிவைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

நாள் ஒன்று ஐந்து முதல் எட்டு மணி நேர உழைப்பில் காருக்கு முழுமையாக டாட்டூ போட ஆறு மாதங்கள் ஆனதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டாட்டூ போடப்பட்ட யு.எக்ஸ். மாடலின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் மதிப்பு இந்திய மதிப்பில் ஒரு கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News