ஆட்டோமொபைல்
ரேன்ஜ் ரோவர் அட்வென்டம் கூப்

ரேன்ஜ் ரோவர் அட்வென்டம் கூப் அறிமுகம்

Published On 2020-03-16 07:35 GMT   |   Update On 2020-03-16 07:35 GMT
ரேன்ஜ் ரோவர் நிறுவனத்தின் எஸ்.வி. கூப் மாடலை தழுவி உருவாகி இருக்கும் அட்வென்டம் கூப் மாடல் அறிமுகம்.



நெதர்லாந்தை சேர்ந்த தனியார் வாகனங்கள் வடிவமைப்பு நிறுவனமான நீல்ஸ் வான் ரோஜ் டிசைன் அட்வென்டம் கூப் உற்பத்தி மாடலினை அறிமுகம் செய்துள்ளது. 

இது லேண்ட் ரோவர் கடந்த ஜனவரியில் ரத்து செய்த எஸ்.வி. கூப் மாடலை தழுவி உருவாகி இருக்கும் இரண்டு கதவுகள் கொண்ட கார் ஆகும். புதிய கார் லேண்ட் ரோவர் எஸ்.வி.ஒ. கிரியேஷன் போன்றே உருவாகிறது. இதில் கஸ்டம்-மேட் அலுமினியம் பாடிவொர்க் வழங்கப்படுகிறது. 

ரேன்ஜ் ரோவர் அட்வென்டம் கூப் மாடலில் லேண்ட் ரோவரின் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 525 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.



அட்வென்டம் கூப் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் ஆடம்பர பொருட்கள் பயன்படுத்தப்படுவதோடு, வெவ்வேறு நிறங்களை கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக ஃபியூயல் ஃபில்லர் கேப்கள், டூயல் டோன் வெளிப்புற பெயின்ட்கள் வழங்கப்படலாம் என வேன் ரோஜி தெரிவித்திருக்கிறார்.

புதிய அட்வென்டம் கூப் மாடலை முழுமையாக கஸ்டமைஸ் செய்வதற்கான கட்டணம் ரூ. 2.19 கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முழுமையாக உற்பத்தி செய்ய அதிகபட்சம் ஆறு மாதங்கள் ஆகும் என தெரிகிறது.
Tags:    

Similar News