ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு

விரைவில் அறிமுகமாகும் புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

Published On 2020-03-12 11:13 GMT   |   Update On 2020-03-12 11:13 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முற்றிலும் புதிய மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் பற்றி எவ்வித தகவலும் இதுவரை வெளியாகிவில்லை. எனினும், இது ஜெ1டி எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இதுதவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹண்ட்டர், ஷெர்பா, ஃபிளையிங் ஃபிளீ மற்றும் ரோட்ஸ்டர் என புதிய பெயர்களை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியானது. புதிய மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய மாடலாக வெளியாகும் என தெரிகிறது.



இது ராயல் என்ஃபீல்டு ஹிமாலன் மாடலுக்கு மாற்றாகவோ அல்லது ஹிமாலயன் மாடலின் சிறிய வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாடல் தவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பழைய மாடல்களை பி.எஸ்.6 தரத்திற்கு அப்டேட் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.

முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பி.எஸ்.6 ஹிமாலயன் மற்றும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் 250சிசி என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News