ஆட்டோமொபைல்
மஹிந்திரா மராசோ

மஹிந்திரா மராசோ பெட்ரோல் மாடல்கள் வெளியீட்டு விவரம்

Published On 2020-03-10 10:55 GMT   |   Update On 2020-03-10 10:55 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ பெட்ரோல் வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மராசோ பெட்ரோல் மாடல்களை இந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த காரின் பி.எஸ்.6 டீசல் மாடல்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 

மஹிந்திரா மராசோ பெட்ரோல் மாடல்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதில் எம் ஸ்டாலியன் ரக டர்போ சார்ஜ் செய்யப்பட்ட காசோலைன் டைரெக்ட் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. இது 161 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.



எம் ஸ்டாலியன் சீரிஸ் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எம் ஸ்டாலியன் ஜி15 என்ஜின் பெறும் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் வாகனமாக மஹிந்திரா மராசோ இருக்கிறது. இதே என்ஜின் மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடலிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மஹிந்திரா மராசோ மாடல் இந்திய சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா பெட்ரோல் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய மராசோ மாடல் விலை ரூ. 7.59 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11.21 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

தற்சமயம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மாடல்களின் விலை ரூ. 15.36 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.34 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News