ஆட்டோமொபைல்
யுலு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கும் பஜாஜ்

Published On 2020-03-09 10:01 GMT   |   Update On 2020-03-09 10:01 GMT
பஜாஜ் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெங்களூரை சேர்ந்த யுலு எனும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ. 60 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. அந்த வகையில் இந்நிறுவனம் தற்தமயம் குறைந்த செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை யுலு பிராண்டிங்கில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ. 40 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. யுலு பிராண்டு ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவதற்கு ரூ. 44 ஆயிரம் வரை செலவிடுகிறது. யுலு நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களை சீனாவில் உற்பத்தி செய்து அவற்றை இந்தியாவில் அசெம்பில் செய்கிறது. 



இவ்வாறு செய்யும் போது ஸ்கூட்டர் விலை ரூ. 35 ஆயிரத்தில் துவங்கி ரூ. 37 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் பஜாஜ் மாடல்களை விட சிறப்பான ஒன்றாக இருக்க வேண்டும் என யுலு விரும்புவதாக தெரிவித்து இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பஜாஜ் ஆட்டோ உருவாக்கிய சுமார் 1 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள யுலு திட்டமிட்டுள்ளது. தற்சமயம் நாடு முழுக்க சுமார் ஐந்து நகரங்களில் 4000 ஸ்கூட்டர்களை விற்றிருக்கிறது. யுலு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 48 வோல்ட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

இவை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
Tags:    

Similar News