ஆட்டோமொபைல்
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப்

2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-03-04 10:06 GMT   |   Update On 2020-03-04 10:06 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஜி.எல்.சி. கூப் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜி.எல்.சி. கூப் மாடல் காரினை அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் மாடல் துவக்க விலை ரூ. 62.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், விரைவில் விநியோகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மெர்சிடிஸ் நிறுவனத்த்ன் MBUX தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய 2020 ஜி.எல்.சி. கூப் மாடல்: 300டி 4 மேடிக் மற்றும் 300 4 மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் உயர் ரக டீசல் மாடலின் விலை ரூ. 63.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அசெம்பிள் செய்யப்படும் பத்தாவது மெர்சிடிஸ் மாடலாக புதிய கூப் மாடல் இருக்கும் என தெரிகிறது.



புதிய காரின் முன்புறம் மெர்சிடிஸ் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் டைமண்ட் பேட்டன் கிரில், இருபுறங்களிலும் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், புதிய அலாய் வீல்கள், பின்புறம் மேம்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், மோல்ட் செய்யப்பட்ட டிஃப்யூசர், புதிய எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

உள்புறம் 10.25 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இவைதவிர பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் மாடல் பி.எஸ். 6 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டிருக்கிறது. இவற்றில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜி.எல்.சி. கூப் 300 4 மேடிக் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 258 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

ஜி.எல்.சி. கூப் 300டி 4 மேடிக் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 245 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் ஸ்டான்டர்டு 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News