ஆட்டோமொபைல்
2020 மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் டீசர்

2020 மெர்சிடிஸ் பென்ஸ் டீசர் வெளியீடு

Published On 2020-03-03 09:06 GMT   |   Update On 2020-03-03 09:06 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புத்தம் புதிய 2020 இ கிளாஸ் மாடல் காருக்கான டீசரினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.



மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் மாடல் சர்வதேச சந்தையில் அதிக பிரபலமான கார் மாடலாக இருக்கிறது. 2021-ம் ஆண்டிற்கு மெர்சிடிஸ் நிறுவனம் புதிய இ கிளாஸ் மாடலினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் 2020 ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிக்கு வைக்கப்பட இருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு சார்ந்த அச்சம் காரணமாக ஜெனிவா மோட்டார் விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் மெர்சிடிஸ் நிறுவனம் புதிய காரினை டிஜிட்டல் முறையில் உலக சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கென மெர்சிடிஸ் நிறுவனம் புதிய டீசர்களை வெளியிட்டுள்ளது.



டீசர்களில் புதிய காரின் முன்புறம் ட்வீக் செய்யப்பட்டு கூர்மையான எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், சற்றே மேம்பட்ட கிரில் வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. இதே போன்று காரின் பின்புறமும் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய காரில் ஹைப்ரிட் என்ஜின் செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. காரின் உள்புறம் தற்போதைய இ கிளாஸ் மாடலில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். அந்த வகையில் ட்வின் ஸ்கிரீன் செட்டப், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
Tags:    

Similar News