ஆட்டோமொபைல்
ஜெனிவா மோட்டார் விழா

கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஜெனிவா மோட்டார் விழா ரத்து

Published On 2020-02-29 15:45 IST   |   Update On 2020-02-29 14:29:00 IST
2020 ஜெனிவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஜெனிவா மோட்டார் விழா 2020 கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூலம் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுவிட்சர்லாந்து அரசாங்கம், பொது மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளதை தொடர்ந்து மோட்டார் விழா ரத்தாகி இருக்கிறது.



2020 ஜெனிவா மோட்டார் விழா மார்ச் 5-ம் தேதி துவங்கி மார்ச் 15-ம் தேதி வரை நடைபெற இருந்தது. 1000-க்கும் அதிகமானோர் கூடும் நிகழ்வுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், எதுவரை தடை விதிக்கப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

2020 ஜெனிவா மோட்டார் விழா ரத்து செய்யப்பட்டுவதாக விழா ஏற்பாட்டு குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு வர்த்தக நிகழ்வுகள் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்குகள் கொரோனா வைரஸ் பாதிப்பு அபாயம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Similar News