ஆட்டோமொபைல்
கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ்.

600 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் கே.டி.எம். சூப்பர்கார்

Published On 2020-02-28 10:53 GMT   |   Update On 2020-02-28 10:54 GMT
கே.டி.எம். நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



ஐரோப்பியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கே.டி.எம். தனது பெரும்பாலான வாகனங்களை இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது. கே.டி.எம். ஸ்போர்ட் கார் ஜி.எம்.பி.ஹெச். கொண்டு அந்நிறுவனம் ஸ்போர்ட் கார்கள் பிரிவில் களமிறங்குகிறது.

கே.டி.எம். நிறுவனம் 12 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்த கே.டி.எம். எக்ஸ் போ மற்றும் அதன் பின் வெளியான மாடல்கள் உலகம் முழுக்க விற்பனை செய்யப்பட்டன. அந்த வரிசையில் கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். மாடலை உருவாக்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

புதிய கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். மாடலினை சுமார் 1000 கிலோ எடையில் அதிகபட்சம் 600 ஹெச்.பி. திறன் வழங்கும் வகையில் உருவாக்கி இருக்கிறது. இதற்கு ஆடியின் 2.5 லிட்டர், 5 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. ஜி.டி.2 ரேசராக களமிறங்கும் கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். இரண்டு கிலோ எடைக்கு ஒரு ஹெச்.பி. திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்படுகிறது.



முதல் 20 கார்கள் இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் எஸ்.ஆர்.ஒ. எனும் சுய ஒழுங்குமுறை வாரியத்தால் உறுதி செயப்பட்டு, பின் ஜி.டி.2 ரேசிங் சீரிசில் களமிங்க முடியும். அந்த வகையில் ஆடி மற்றும் போர்ஷ் நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது நிறுவனமாக இதுபோன்ற ரேசிங் காரை உருவாக்கிய பெருமையை கே.டி.எம். பெறுகிறது.

இதுதவிர புதிய 500 ஹெச்.பி. வரையிலான செயல்திறன் வழங்கும் என்பதால், கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். ஜி.டி. விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கும் ரேசிங் சீரிஸ்களிலும் பங்கேற்க முடியும்.
Tags:    

Similar News