ஆட்டோமொபைல்
டொயோட்டா வெல்ஃபயர்

டொயோட்டா வெல்ஃபயர் பிரீமியம் எம்.பி.வி. இந்தியாவில் வெளியானது

Published On 2020-02-26 10:25 GMT   |   Update On 2020-02-26 10:25 GMT
டொயோட்டா நிறுவனத்தின் வெல்ஃபயர் பிரீமியம் எம்.பி.வி. கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய பிரீமியம் எம்.பி.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் இந்தியாவில் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடல் ஆகும். இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 79.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் பல்வேறு பிரீமியம் ஆடம்பர அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வெல்ஃபயர் பிரீமியம் எம்.பி.வி. மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 115 பி.ஹெச்.பி. @4700 ஆர்.பி.எம்., 198 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் முன்புற ஆக்சிலில் 115 கிலோவாட் @4800 ஆர்.பி.எம். செயல்திறனும், பின்புறம் 50 கிலோவாட் @4608 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்துகிறது.



மற்ற அம்சங்களை பொருத்தவரை டொயோட்டா வெல்ஃபயர் எம்.பி.வி.- ட்வின் சன்ரூஃப், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் கண்ட்ரோல் கொண்ட ஸ்லைடிங் கதவுகள், 13 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் வைபை கனெக்டிவிட்டி, ஆட்டோ எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஹீட்டெட் ORVMகள், 16 நிறங்களில் ரூஃப் ஆம்பியன்ட் லைட்டிங் கொண்டிருக்கிறது.

காரின் சென்ட்ரல் கன்சோலில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 17 ஸ்பீக்கர் ஜெ.பி.எல். ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பிற்கு புதிய டொயோட்டா மாடலில் 360 டிகிரி கேமரா, பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News