ஆட்டோமொபைல்
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

சத்தமில்லாமல் உருவாகும் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?

Published On 2020-02-24 10:29 GMT   |   Update On 2020-02-24 10:29 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சத்தமில்லாமல் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கி வருதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

புதிய ஹீரோ இ மேஸ்ட்ரோ கான்செப்ட் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் கான்செப்ட் மாடலின் தோற்றம் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. விற்பனைக்கு வரும் பட்சத்தில் சக்திவாந்த லித்தியம் அயன் பேட்டரி கொண்ட இ மேஸ்ட்ரோ ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.



இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் பிராண்டுகள் தனித்தனியே இயங்கி வாகனங்களை உருவாக்கி வருகின்றன. ஹீரோ இ மேஸ்ட்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹீரோ பிராண்டின் ஆய்வு மற்றும் உற்பத்தி பிரிவுக்கான ஆலையில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் தற்சமயம் குறைவாக இருந்தாலும், எதிர்காலத்தில் இது முற்றிலும் மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பஜாஜ் ஆட்டோ மற்றும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன.
Tags:    

Similar News