ஆட்டோமொபைல்
2020 ஃபோர்டு ஃபிகோ

2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பையர் மற்றும் ஃபிரீஸ்டைல் பி.எஸ்.6 கார்கள் அறிமுகம்

Published On 2020-02-20 10:14 GMT   |   Update On 2020-02-20 10:14 GMT
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் 2020 ஃபிகோ, ஆஸ்பையர், ஃபிரீஸ்டைல் பி.எஸ்.6 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 ரக ஃபிகோ, ஆஸ்பையர் மற்றும் ஃபிரீஸ்டைல் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபோர்டு ஃபிகோ, ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பையர் பி.எஸ்.6 மாடல்களின் விலை முறையே ரூ. 5.39 லட்சம், ரூ. 5.89 லட்சம் மற்றும் ரூ. 5.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்டு ஃபிகோ பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 5.39 லட்சத்தில் துவங்குகிறது. இது பி.எஸ்.4 மாடலை விட ரூ. 16,000 அதிகம் ஆகும். டாப் எண்ட் புளூ வேரியண்ட் விலை ரூ. 7.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பையர் பி.எஸ்.6 மாடல்களின் விலை முறையே ரூ. 5.89 லட்சம் மற்றும் ரூ. 8.19 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை முந்தைய மாடல்களை விட முறையே ரூ. 2000 மற்றும் ரூ. 37,000 குறைவாகும்.

இதேபோன்று ஃபோர்டு ஆஸ்பையர் பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 4000 முதல் ரூ. 38000 வரை குறைந்திருக்கிறது. இவற்றின் விலை ரூ. 5.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8.37 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மூன்று மாடல்களும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பி.எஸ்.6 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர், 119 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

புதிய மேம்பட்ட என்ஜின்களை தவிர புதிய ஃபோர்டு ஃபிகோ, ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பையர் மாடல்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
Tags:    

Similar News