ஆட்டோமொபைல்
டொயோட்டா வெல்ஃபயர்

டொயோட்டாவின் புதிய பிரீமியம் எம்.பி.வி. கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2020-02-17 09:44 GMT   |   Update On 2020-02-17 09:44 GMT
டொயோட்டா நிறுவனம் தனது புத்தம் புதிய பிரீமியம் எம்.பி.வி. காரின் இந்திய வெளியீட்டு தேதியை அசதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



டொயோட்டா நிறுவனம் தனது பிரீமியம் எம்.பி.வி.- வெல்ஃபயர் கார் மாடலை இந்தியாவில் பிப்ரவரி 26-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. புதிய வெல்ஃபயர் காரில் பல்வேறு பிரீமியம் அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா வெல்ஃபயர் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 180 பி.ஹெச்.பி. பவர், 235 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனத்தின் புதிய பிரீமியம் எம்.பி.வி. கார், அளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இது அதிக இடவசதியை வழங்குவதோடு, பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வயர்லெஸ் சார்ஜிங், புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வழங்கப்படுகிறது.



பாதுகாப்பிற்கு டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் பல்வேறு ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், பின்புற கேமரா, ஏ.பி.எஸ்., இ.பி.டி., எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவை முதன்மை அம்சங்களாக இருக்கின்றன. இதுதவிர பல்வேறு இதர அம்சங்களும் வழங்கப்படுகிறது.

டொயோட்டா வெல்ஃபயர் மாடல் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு அடுத்த நிலையில் நிறுத்தப்படும் என தெரிகிறது. அந்த வகையில் இது டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலாக வெளியாக இருக்கிறது. இந்தியாவில் டொயோட்டா வெல்ஃபயர் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
Tags:    

Similar News