ஆட்டோமொபைல்
லெக்சஸ் எல்.சி.500ஹெச்

அதிரடி அம்சங்கள் நிறைந்த லெக்சஸ் ஆடம்பர ஹைப்ரிட் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-02-03 10:38 GMT   |   Update On 2020-02-03 10:38 GMT
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சஸ் இந்தியாவில் எல்.சி.500ஹெச் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.



லெக்சஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் காரை அறிமுகம் செய்துள்ளது. லெக்சஸ் எல்.சி.500ஹெச் என அழைக்கப்படும் புதிய ஹைப்ரிட் எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 1.96 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காருடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட லெக்சஸ் இ.எஸ். 300ஹெச் மற்றும் என்.எக்ஸ். 300ஹெச் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது. இரு கார்களின் விலை முறையே ரூ. 51.90 லட்சம் மற்றும் ரூ. 60.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய எல்.சி.500ஹெச் கூப் மாடலில் கூர்மையான கிரில், முக்கோன வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ள. இத்துடன் உயரமான கேபின், 21 இன்ச் அளவில் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் நீண்ட பொனெட் காரின் பின்புறம் வரை நீள்கிறது. 



பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டூயல் எக்சாஸ்ட் மற்றும் பின்புற டிஃப்யூசர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. உள்புறம் லெக்சஸ் எல்.சி.500ஹெச் மாடலில் அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 10.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய எல்.சி.500ஹெச். மாடலில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 295 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் 110 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் செயல்திறனை 355 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 350 என்.எம். டார்க் வரை வழங்குகிறது.

இத்துடன் 10 ஸ்பீடு யூனிட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதில் 3 ஸ்டெப் சி.வி.டி. மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு புதிய காரில் லெக்சஸ் சேஃப்டி பிளஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News