ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் லிமிட்டெட் எடிஷன்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-02-01 10:00 GMT   |   Update On 2020-02-01 09:00 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் பிப்ரவரி 10-ம் தேதி மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளில் 499சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாடலிலும் பிரத்யேக குறியீட்டு எண் மற்றும் டூயல் டோன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 27.2 பி.ஹெச்.பி. பவர், 41.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.



புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 யூனிட் விற்பனை நிறுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பி.எஸ்.6 ஹிமாலயன் மற்றும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. பி.எஸ்.6 கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 1.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பி.எஸ்.4 மாடலை விட ரூ. 11,000 வரை அதிகம் ஆகும். பி.எஸ். 6 கிளாசிக் 350 மாடலில் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டுள்ளது.

பி.எஸ். 6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலின் விலை ரூ. 1.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் பி.எஸ். 6 என்ஜின் தவிர பல்வேறு இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News