ஆட்டோமொபைல்
டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட்

டாடா டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்தியாவில் வெளியீடு

Published On 2020-01-26 11:19 GMT   |   Update On 2020-01-26 11:19 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டியாகோ மற்றும் டிகோர் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 4.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), ரூ. 5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் டியாகோ மாடலின் முன்புறம் புதிய கிரில் மற்றும் சில வடிவமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், முன்புற பம்ப்பர், ஏர் டேம் மற்றும் வட்ட வடிவிலான ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அலாய் வீல்கள், பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட ORVMகள், பிளாக்டு அவுட் ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர காரின் பக்கவாட்டுகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பின்புறம் டியாகோ மாடலில் புதிய டெயில் லைட்கள், பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டியாகோ மாடலில் பி.எஸ். 6 ரக 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.



டிகோர் மாடலின் முன்புறம் மெல்லிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய வடிவமைப்பிலான ஃபாக் லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பொனெட் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

டிகோர் ஃபேஸ்லிஃப்ட் பக்கவாட்டில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. பின்புற டெயில்லைட்கள் அப்டேட் செய்யப்பட்டு, இருபுறங்களிலும் பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டுள்ளன.

புதிய டிகோர் மாடலில் பி.எஸ்.6 ரக 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

Tags:    

Similar News