ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஆரா

இந்தியாவில் ஹூண்டாய் ஆரா அறிமுகம்

Published On 2020-01-23 10:00 GMT   |   Update On 2020-01-23 10:00 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆரா கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 5.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஆரா கார் அந்நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் மாடலுக்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் ஆரா காரில் கேஸ்கேடிங் கிரில், ட்வின் பூமராங் வடிவமைப்பில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், கூர்மையான ஹெட்லேம்ப் மற்றும் ப்ரோஜெக்டர் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் ராப் அரவுண்ட் டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, டூயல் டோன் டேஷ்போர்டு, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



புதிய ஆரா காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் முறையே 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் மற்றும் 120 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவைதவிர 1.2 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

டீசல் என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பிற்கு ஹூண்டாய் ஆரா காரில் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ்., சீட் பெல்ட் ரிமைண்டர், பின்புற பார்க்கிங் சென்சார்கள், கேமராக்கள், கீலெஸ் என்ட்ரி, ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ISOFIX சைல்டு சீட் ஆன்க்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஆரா டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News