ஆட்டோமொபைல்
டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 டீசர்

டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 டீசர் வெளியீடு

Published On 2020-01-22 15:51 GMT   |   Update On 2020-01-22 15:51 GMT
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளுக்கான புதிய டீசரை வெளியிட்டுள்ளது.



டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2020 ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஜனவரி 25-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ்.6 ரக என்ஜின் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

டி.வி.எஸ். நிறுவன சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் புதிய மோட்டார்சைக்கிளில் புத்தம் புதிய எல்.இ.டி. ஹெட்லைட் யூனிட் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்த மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய 2020 ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

2020 டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலின் முன்புறம்  டெலிஸ்கோபிக் ஆயில் டேம்ப் செய்யப்பட்ட சஸ்பென்ஷனும், பின்புறம் ஐந்து நிலைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய, ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படலாம். இது மோட்டார்சைக்கிளை நீண்டதூர பயணங்களுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.

புதிய ஸ்டார் சிட்டி மாடலில் 110சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 8.3 பி.ஹெச்.பி. @7000 ஆர்.பி.எம். செயல்திறனும், 8.7 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இத்துடன் 4-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News