ஆட்டோமொபைல்
ஆடி ஏ8 எல்

பிப்ரவரி மாதம் இந்தியா வரும் புதிய ஆடி கார்

Published On 2020-01-18 10:16 GMT   |   Update On 2020-01-18 10:16 GMT
ஆடி நிறுவனத்தின் புதிய கார் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஆடி நிறுவனத்தின் புதிய ஏ8 எல் ஃபிளாக்‌ஷிப் செடான் கார் இந்தியாவில் பிப்ரவரி 3-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நான்காம் தலைமுறை ஏ8 எல் கார் ஃவோகஸ்வோகன் குழுமத்தின் MLB இவோ பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. 

இதனால் புதிய கார் முந்தைய மாடலை விட எடை குறைவாக இருக்கும். புதிய ஏ8 எல் காரின் முன்புறம் பிரம்மாண்ட வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய ஏ8 மாடலில் சிறிய ஹெட்லேம்ப் மற்றும் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய காரில் எல்.இ.டி. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்  மற்றும் பெரிய கிரில் வழங்கப்படலாம். 



புதிய ஏ8 எல் காரில் மேம்பட்ட பம்ப்பர்கள் காரின் இருபுறங்களிலும் வழங்கப்படலாம் என்றும் இத்துடன் புதிய டெயில் லைட்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. காரின் உள்புறத்தில் புதிய இன்டீரியர் எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றில் ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் சிஸ்டம், ஹீட்டெட் சீட்கள், மசாஜிங் சீட்கள், ட்வின் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பேங் மற்றும் அலுஃப்சென் சரவுண்ட் மியூசிக் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப், 4-சோன் கிளைமேட் கண்ட்ரோல், இருக்கை மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை லெதர் மூலம் உருவாக்கப்படுகின்றன.

ஆடி ஏ8 எல் கார் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பாதுகாப்பிற்கு பல்வேறு ஏர்பேக், டிரைவிங் மோட்கள், ஆட்டோ பார்க் அசிஸ்ட், ஏ.பி.எஸ்., இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News