ஆட்டோமொபைல்
டாடா நெக்சான் இ.வி.

டாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-01-13 09:18 GMT   |   Update On 2020-01-13 09:18 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் நெக்சான் கார் இந்திய வெளியீட்டு விவரங்களௌ தொடர்ந்து பார்ப்போம்.



டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் இம்மாதம் 22-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து டாடா நிறுவனம் நெக்சான் இ.வி. காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் விலை ஜனவரி 28-ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அந்நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

நெக்சான் இ.வி. கார்: XM, XZ+ மற்றும் XZ+ LUX என மூன்று வேரியண்ட்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், இரண்டு டிரைவ் மோட்கள், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.



டாடா நெக்சான் இ.வி. காரில் நிரந்தர காந்தம் கொண்ட ஏ.சி. மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டார் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி IP67 தரச்சான்று பெற்று இருப்பதோடு, லிக்விட் கூலிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பேட்டரி பேக் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகும். 

டாடா நெக்சான் இ.வி. காரில் 30.2 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள மோட்டார் 245 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனால் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.9 நொடிகளில் எட்டிவிடும்.

இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு சார்ஜ் செய்யும் போது 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். வீட்டில் உள்ள சார்ஜர் பயன்படுத்தும் போது முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரம் ஆகும். 
Tags:    

Similar News