ஆட்டோமொபைல்
2020 மெர்சிடிஸ் ஜி.எல்.இ.

2020 மெர்சிடிஸ் ஜி.எல்.இ. இந்திய வெளியீட்டு தேதி

Published On 2020-01-11 09:18 GMT   |   Update On 2020-01-11 09:18 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. காரின் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.



மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய ஜி.எல்.இ. எஸ்.யு.வி. கார் இந்தியாவில் ஜனவரி 28-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. புதிய ஜி.எல்.இ. காரில் பல்வேறு அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. கார் அளவில் பெரியதாகவும், நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதனால் காரின் கேபின் அளவு அதிகமாகிறது. இத்துடன் கார் முழுக்க எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹெட்லேம்ப், டெயில் லைட், டி.ஆர்.எல். உள்ளிட்டவைகளில் எல்.இ.டி. பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஜி.எல்.இ. காரில் இரண்டு 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸட்ரூமென்ட் கன்சோலாக இருக்கிறது. இத்துடன் நான்கு சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹேண்ட்ஸ்-ஃபிரீ பார்க்கிங், பவர்டு டெயில்கேட், 360 டிகிரி கேமரா, இருக்கைகளை மின்சக்தியால் இயக்கும் வசதி, அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.



2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. கார்: ஜி.எல்.இ. 300டி, ஜி.எல்.இ. 400டி மற்றும் ஜி.எல்.இ. 450 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் பென்ஸ் ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 256 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஜி.எல்.இ. 400டி மாடலில் பெரிய 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 330 பி.ஹெச்.பி. பவர், 700 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இதன் மூன்றாவது வேரியண்ட் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இது 367 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. பெட்ரோல் யூனிட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News