ஆட்டோமொபைல்
2020 ரேன்ஜ் ரோவர் எவோக்

விரைவில் இந்தியா வரும் 2020 ரேன்ஜ் ரோவர் எவோக்

Published On 2020-01-10 10:01 GMT   |   Update On 2020-01-10 10:01 GMT
லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை எவோக் எஸ்.யு.வி. மாடல் காரை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை எவோக் எஸ்.யு.வி. காரை இந்திய சந்தையில் ஜனவரி 30-ம் தேதி முதல் விற்பனை செய்ய துவங்குகிறது.

இந்திய சந்தையில் முதல் தலைமுறை எவோக் மாடல் கார் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமான இரண்டாம் தலைமுறை மாடல் தற்சமயம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது, புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முன்புறம் மற்றும் பின்புறங்களில் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டு, உள்புறங்களில் ஆடம்பரமான கேபின் வழங்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு அந்நிறுவனத்தின் வெலார் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.



புதிய எவோக் மாடலின் ஸ்டீரிங் வீல் தொடுதிரை வசதி கொண்ட கண்ட்ரோல்களும், பிஸ்டல் க்ரிப் கியர் லீவர், முன்புற இருக்கைகளை மின்சாரத்தால் அட்ஜஸ்ட் செய்யும் வசதி, பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

2020 ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலில் பி.எஸ்.6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜெனியம் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் மற்றும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News