ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் ஆரா காம்பேக்ட் செடான் அதிகாரப்பூர்வ வரைபடங்கள் வெளியீடு

Published On 2019-12-17 10:46 GMT   |   Update On 2019-12-17 10:46 GMT
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் செடான் மாடல் ஆரா காரின் அதிகாரப்பூர்வ வரைபடங்களை வெளியிட்டுள்ளது.



ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஆரா காம்பேக்ட் செடான் காரின் அதிகாரப்பூர்வ வரைபடங்களை வெளியிட்டுள்ளது. புதிய ஹூண்டாய் ஆரா கார் அந்நிறுவனத்தின் எக்ஸ் சென்ட் மாடலுக்கு மாற்றாக உருவாகி வருகிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் இந்தியாவில் டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரைபடங்களின் படி ஹூண்டாய் ஆரா காம்பேக்ட் செடான் மாடலில் அதிரடியான ஸ்போர்ட் தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், பெரிய கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது.



காரின் பக்கவாட்டில் எளிமையான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள், பிளாக்டு அவுட் சி பில்லர், ஃபுளோட்டிங் ரூஃப் டிசைன் கொண்டிருக்கிறது. காரின் பின்புறத்தில் புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள், ரூஃப் ஸ்லோப்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பார்க்க கூப் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது.

டேஷ்போர்டு டூயல் டோன் தீம் செய்யப்பட்டுள்ளது. இது நியோஸ் காரில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது. புதிய ஹூண்டாய் ஆரா காரில் கியர் லீவர் சென்டர் கன்சோலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டீசர் மற்றும் 1.0 லிட்டர் டைரக்ட் இன்ஜக்‌ஷன் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News