ஆட்டோமொபைல்
ஸ்கோடா கரோக்

ஸ்கோடா கரோக் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-12-16 10:56 GMT   |   Update On 2019-12-16 10:56 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கரோக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது புதிய கரோக் மாடல் கார் இந்தியாவில் ஏப்ரல் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா கரோக் மாடல் பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பில் செய்யப்படுகிறது. புதிய கரோக் மாடலில் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் யூனிட், 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



இரு என்ஜின்களும் முறையே 113 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க், மற்றும் 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. புதிய ஸ்கோடா கரோக் மாடல் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் புதிய கார் எம்.ஜி. ஹெக்டார், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டக்சன் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும். 

இதுதவிர ஸ்கோடா நிறுவனம் புத்தம் புதிய ஆக்டேவியா ஆர்.எஸ்.245 மாடலை 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் இந்த கார் மொத்தமாக 200 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
Tags:    

Similar News