ஆட்டோமொபைல்
வால்வோ எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பி.எஸ்.6

அசத்தல் அம்சங்கள் நிறைந்த வால்வோ எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பி.எஸ்.6 இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-12-14 10:04 GMT   |   Update On 2019-12-14 10:04 GMT
வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பி.எஸ்.6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



வால்வோ நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 39.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காரில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய வால்வோ காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன், 8 ஸ்பீடு கியர்டிரானிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்.சி.40 மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, ஆடம்பர காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் புதிய மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.



புதிய எக்ஸ்.சி.40 மாடலில் 12.3 இன்ச் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் ஹார்மன் கார்டன் 14 ஸ்பீக்கர் 600 வாட் சரவுண்ட் சிஸ்டம், டேஷ் மவுன்ட் செய்யப்பட்ட வூஃபர், பானரோமிக் சன்ரூஃப், ஸ்மார்ட்போன்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் வசதி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 9 இன்ச் MID தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News