ஆட்டோமொபைல்
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ.

இந்தியாவில் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ. அறிமுகம்

Published On 2019-12-12 10:49 GMT   |   Update On 2019-12-12 10:49 GMT
மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.ஏ. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எட்டாம் தலைமுறை ஜி.எல்.ஏ. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 ஜி.எல்.ஏ. காரில் சிறிதளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

புதிய ஜி.எல்.ஏ. காரில் அதிநவீன டிரைவிங் அசிஸ்டண்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஓட்டுனருக்கு அதிக வசதிகளை வழங்குவதோடு, இந்த பிரிவு கார்களில் அதிநவீன பாதுகாப்பு வசதியை வழங்குகிறது. 

2020 ஜி.எல்.ஏ. காரில் நிரந்தரமாக 4MATIC ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தை பொருத்திக் கொள்ள முடியும். இதில் கார்பன் ஃபைபர் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 1000 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆல் வீல் டிரைவ் அம்சம் கொண்டு ஓட்டுனரால் டைனமிக் செலக்ட் அம்சத்தை பயன்படுத்தி 4MATIC திறனை இயக்க முடியும்.



புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் வருகிறது. இது முந்தைய வெர்ஷன்களை விட அதிக திறன் கொண்டிருக்கிறது. இதே கார் பிளக்-இன் ஹைப்ரிட் டிரைவ் சிஸ்டம் உருவாக்கப்பட்டு வருவதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

புதிய தலைமுறை ஜி.எல்.ஏ. காரில் 1.33 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 161 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.7 நொடிகளில் எட்டிவிடும். 
Tags:    

Similar News