ஆட்டோமொபைல்
ஹோண்டா சிட்டி பி.எஸ்.6

இந்தியாவில் ஹோண்டா சிட்டி பி.எஸ்.6 அறிமுகம்

Published On 2019-12-11 10:36 GMT   |   Update On 2019-12-11 10:37 GMT
ஹோன்டா நிறுவனத்தின் சிட்டி பி.எஸ். 6 பெட்ரோல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஹோண்டா நிறுவனத்தின் பி.எஸ்.6 சிட்டி பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஹோண்டா நிறுவனம் தனது பெட்ரோல் மாடல்களை மட்டுமே பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்துள்ளது. எதிர்காலத்தில் டீசல் என்ஜின்களும் பி.எஸ்.6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.



புதிய காரில் ஹோண்டா நிறுவனம் டிஜிபேட் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் டன்-பை-டன் நேவிகேஷன், நேரலை போக்குவரத்து நெரிசல் தகவல்கள், வாய்ஸ் கமாண்ட், ப்ளூடூத் இணைப்பில் அலைபேசி வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 காரில் 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கார் தாய்லாந்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News