ஆட்டோமொபைல்
லேண்ட் ரோவர் டிஃபென்டர்

லேண்ட் ரோவர் டிஃபென்டர் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-12-01 06:31 GMT   |   Update On 2019-12-01 06:31 GMT
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபென்டர் எஸ்.யு.வி. மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் அறிமுகமானது முதல் 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் முதலில் டிஃபென்டர் 110 மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

சிறிய டிஃபென்டர் 90 இந்தியாவில் 2020 டிசம்பர் மாத வாக்கில் துவங்கலாம். இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் டிஃபென்டர்: ஸ்டான்டர்டு, எஸ், எஸ்.இ., மற்றும் ஹெச்.எஸ்.இ. என நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். அனைத்து வேரியண்ட்களிலும் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படலாம்.



உயர் ரக எஸ்.இ. மற்றும் ஹெச்.எஸ்.இ. வேரியண்ட்களில் க்ளியர்சைட், 360-டிகிரி கேமரா, விர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிரீமியம் லெதர் இருக்கைகள், பிளைன்ட்-ஸ்பாட் வார்னிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இத்துடன் டிஃபென்டர் சீரிஸ் அனைத்து மாடல்களிலும் அர்பன் பேக், கண்ட்ரி பேக், அட்வென்ச்சர் பேக் மற்றும் எக்ஸ்புளோரர் பேக் என பல்வேறு அக்சஸரீ பேக்கேஜ்களுடன் கிடைக்கிறது. இது ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ற அம்சங்களை வழங்குகிறது.

இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒற்றை என்ஜின் ஆப்ஷனில் வெளியாகலாம். இது 296 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் இக்னியம் பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடன் கிடைக்கிறது.
Tags:    

Similar News