ஆட்டோமொபைல்
டாடா H2X

டாடா H2X அறிமுக விவரம்

Published On 2019-11-25 10:11 GMT   |   Update On 2019-11-25 10:11 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் H2X மாடல் கார் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் H2X கான்செப்ட் மாடலை ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்த மாடல் உற்பத்திக்கு தயாரான வடிவம் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய H2X மாடல் கார் டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வீல்பேஸ் நீண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கான்செப்ட் வடிவம் இந்த ஆண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

டாடா H2X கான்செப்ட் காரில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் வடிவமைப்பு, பெரிய அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச்கள், பானரோமிக் சன்ரூஃப் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதன் உண்மை வடிவில் இவை வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.



புதிய காரில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் தற்சமயம் விற்பனை செய்யப்படும் டாடா டியாகோ மாடலில் பி.எஸ். 4 விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இந்தியாவில் டாடா H2X காரின் விலை ரூ. 4.75 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மாருதி சுசுகியின் இக்னிஸ், மஹிந்திரா கே.யு.வி.100 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News