ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ். 600

சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ். 600 அறிமுகம்

Published On 2019-11-22 09:52 GMT   |   Update On 2019-11-22 09:52 GMT
மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய மேபக் ஜி.எல்.எஸ். 600 கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



மெர்சிடிஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேபக் ஜி.எல்.எஸ். 600 கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மெர்சிடிஸ் கார் பென்ட்லி பென்ட்யகா, ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மற்றும் மசிரட்டி லீவன்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கிறது.

புதிய காரின் முன்புறம் மேபக் வடிவ குரோம் கிரில், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. பம்ப்பரிலும் பெரிய என்ட்-டு-என்ட் குரோம் கிரில் வழங்கப்பட்டுள்ளது. பொனெட்டில் உள்ள கோடுகள் வழக்கமான ஜி.எல்.எஸ். மாடல்களில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது. பின்புற டெயில் லேம்ப்களில் குரோம் பெசல்கள், புதிய டெயில்பைப் வழங்கப்பட்டுள்ளன.



புதிய ஆடம்பர எஸ்.யு.வி. மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 542 பி.ஹெச்.பி. பவர், 730 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 

இந்த என்ஜினுடன் 48-வோல்ட் சிஸ்டம் இ.கியூ. பூஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் செயல்திறனை 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 21 பி.ஹெச்.பி. வரை அதிகபடுத்துகிறது. 

சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ். 600 4 மேடிக் கார் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாணடில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News