ஆட்டோமொபைல்
அல்ட்ராவைலெட் எஃப்77

அல்ட்ராவைலெட் எஃப்77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2019-11-14 13:51 GMT   |   Update On 2019-11-14 13:51 GMT
அல்ட்ராவைலெட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அல்ட்ராவைலெட் ஆட்டோமோட்டிவ் எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அல்ட்ராவைலெட் எஃப்77 என அழைக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிளின் விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்தில் துவங்கி ரூ. 3.25 லட்சம் (ஆன்-ரோடு, பெங்களூரு) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அல்ட்ராவைலெட் எஃப்77 மோட்டார்சைக்கிளில் 3 மாட்யூலர் லித்தியம் அயன் பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் திறன் 4.2 கிலோவாட் ஆகும். இந்த பேட்டரிகளுடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இவை ஒருங்கிணைந்து 33.5 பி.ஹெச்.பி. பவர் @2250 ஆர்.பி.எம். மற்றும் 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.



புதிய எஃப்77 மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

பிரேக்கிங்கிற்கு எஃப்77 மாடலின் முன்புறம் 320 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அல்ட்ராவைலெட் எஃப்77 மாடல்: லைட்னிங், லேசர் மற்றும் ஷேடோ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் வடிவமைப்புகளில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மிகக்குறைந்தளவு கிராஃபிக்ஸ் கொண்டுள்ள எஃப்77 மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News