ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட்

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-11-08 09:49 GMT   |   Update On 2019-11-08 09:49 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வி கிளாஸ் எலைட் காரை அறிமுகம் செய்துள்ளது.



மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் வி கிளாஸ் எலைட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய வி கிளாஸ் எலைட் மாடல் விலை ரூ. 1.10 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பென்ஸ் வி கிளாஸ் எலைட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் புதிய வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய வி கிளாஸ் எலைட் மாடலில் ட்வீக் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர், முன்புறம் ஸ்போர்ட் பம்ப்பர் மற்றும் அகலமான மெஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளது. புதிய வி கிளாஸ் எலைட் மாடல் ஸ்டீல் புளு, செலினைட் கிரே மற்றும் கிராஃபைட் கிரே போன்ற புதிய நிறங்களில் கிடைக்கிறது.



காரின் உள்புறத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட் ஆறு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புடன் வருகிறது. இத்துடன் சொகுசு அம்சங்கள் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் ரூஃப், மசாஜிங் வசதி மற்றும் 640 வாட் பர்மெஸ்டர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட் மாடலில் புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 161 பி.ஹெச்.பி. பவர், 380 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 
Tags:    

Similar News