ஆட்டோமொபைல்
கே.டி.எம். 890 டியூக் ஆர்

கே.டி.எம். 890 டியூக் ஆர் அறிமுகம்

Published On 2019-11-07 10:11 GMT   |   Update On 2019-11-07 10:11 GMT
கே.டி.எம். நிறுவனத்தின் புதிய 890 டியூக் ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.



கே.டி.எம். நிறுவனத்தின் 890 டியூக் ஆர் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடல் 790 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடல் பார்க்க 790 டியூக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடலில் கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், பல்வேறு ரைடிங் மோட் மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., எல்.இ.டி. டெயில் லைட், டி.எஃப்.டி. கலர் டிஸ்ப்ளே உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.



புதிய கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடலில் 890 சிசி பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 790 டியூக் மாடலை விட 15 பி.ஹெச்.பி. மற்றும் 14 என்.எம். டார்க் அதிக செயல்திறன் வழங்குகிறது.

சர்வதேச சந்தையில் கே.டி.எம். 890 டியூக் மாடல் விற்பனை வரும் வாரங்களில் துவங்குகிறது. தற்சமயம் இந்த மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படாது. கே.டி.எம். நிறுவனம் சமீபத்தில் 790 டியூக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக கே.டி.எம். 790 டியூக் வெறும் 100 யூனிட்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக கே.டி.எம். நிறுவனம் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இது இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக இருந்தது. இந்தியாவில் இந்த மாடல் இந்திய பைக் வாரத்தின் போது வெளியிடப்பட இருக்கிறது.
Tags:    

Similar News