ஆட்டோமொபைல்
எம்.ஜி. இசட்.எஸ். இ.வி.

எம்.ஜி. மோட்டார் இ.வி. கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2019-11-06 08:20 GMT   |   Update On 2019-11-06 08:20 GMT
எம்.ஜி. மோட்டார் இந்தியா இசட்.எஸ். இ.வி. காரின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. மாடல் டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் வாகனம் 2020 முதல் காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாகனத்திற்கான டீசர்களை எம்.ஜி. மோட்டார் சில காலமாக வெளியிட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. இந்தியாவில் ஹூன்டாய் கோனா மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. மாடலின் இந்திய வெர்ஷன் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இது ஐரோப்பிய மாடலில் உள்ளதை போன்ற பேட்டரி திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். பிரிட்டனில் காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் 141 பி.ஹெச்.பி. பவர், 353 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் மோட்டார் கொண்டுள்ளது.



இதில் உள்ள 44.5 கிலோவாட் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை செல்லும். லித்தியம் அயன் பேட்டரியை 50 கிலோவாட் டி.சி. சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 80 சதவிகிதத்திற்கு சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே போதுமானது. 7 கிலோவாட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது ஏழு மணி நேரத்தில் சார்ஜ் செய்திட முடியும்.

இந்தியாவில் எம்.ஜி. எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், கிளைமேட் கண்ட்ரோல், அலாய் வீல், ஒ-டி-ஏ சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News