ஆட்டோமொபைல்
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி.

விரைவில் இந்தியா வரும் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி.

Published On 2019-11-05 10:53 GMT   |   Update On 2019-11-05 10:53 GMT
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய காருக்கென ஃபோர்டு நிறுவனம் மஹந்திராவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. 

புதிய எம்.பி.வி. கார் மஹிந்திரா மராசோ மாடலை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய ஃபோர்டு எம்.பி.வி. இந்திய சந்தைக்கென பிரத்யேக மாடலாக உருவாகி வருகிறது. முன்னதாக இரு நிறுவனங்களும் இணைந்து மூன்று புதிய எஸ்.யு.வி.க்கள் விற்பனையை ஊக்குவிக்கும் என அறிவித்துள்ளது.

புதிய எம்.பி.வி. கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு, பிரத்யேக அம்சங்களுடன் மராசோ மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் மற்ற நிறுவனங்களை போன்று ஃபோர்டு-மஹிந்திரா ரி-பேட்ஜ் வெர்ஷனை அறிமுகம் செய்யாது என கூறப்படுகிறது.



புதிய ஃபோர்டு எம்.பி.வி. மாடலில் பி.எஸ். 6 ரக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். டீசல் யூனிட் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் யூனிட் தவிர புதிய ஃபோர்டு எம்.பி.வி. மாடலில் மஹிந்திராவின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

இந்தியாவில் எம்.பி.வி. வாகன விற்பனை அதிகரித்து வருவதால் ஃபோர்டு நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த புதிய எம்.பி.வி. வழி செய்யும் என எதிர்பார்க்கிறது.
Tags:    

Similar News