ஆட்டோமொபைல்
மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிஷன்

இந்தியாவில் மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிஷன் அறிமுகம்

Published On 2019-10-30 09:32 GMT   |   Update On 2019-10-30 09:32 GMT
மினி இந்தியா நிறுவனம் கன்ட்ரிமேன் காரின் பிளாக் எடிஷன் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.



மினி இந்தியா நிறுவனம் தனது கன்ட்ரிமேன் காரின் பிளாக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் விலை ரூ. 42.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மினி கன்ட்ரிமேன் லிமிட்டெட் எடிஷன் வெறும் 24 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய லிமிட்டெட் எடிஷன் கார் கூப்பர் எஸ் ஜான் கூப்பர் வொர்க்ஸ் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்டான்டர்டு மாடல் விலையை விட ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலில் புதிய பிளாக் கிரில், கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ORVMகள் வழங்கப்பட்டுள்ளது.



இத்துடன் ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்களில் பியானோ பிளாக் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொனெட்டில் கருப்பு நிற ஸ்டிரைப் செய்யப்பட்டுள்ளது. இதில் 18 இன்ச் JCW அலாய் வீல்கள் மற்றும் ஃபிலாட் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

காரின் உள்புறம் ஹெட்-அப் டிஸ்ப்ளே, மினி வையர்டு பேக்கேஜ், எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் சீட், பானரோமிக் கிலாஸ் ரூஃப், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரிங் வீல் மற்றும் உள்புறத்தில் முற்றிலும் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது.

மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 189 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News