ஆட்டோமொபைல்
ஆடி ஏ6

இந்தியாவில் புத்தம் புதிய ஆடி ஏ6 அறிமுகம்

Published On 2019-10-25 09:00 GMT   |   Update On 2019-10-25 09:00 GMT
ஆடி நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏ6 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது.



ஆடி நிறுவனம் இந்தியாவில் 2019 ஏ6 செடான் காரை அறிமுகம் செய்தது. புதிய 2019 ஆடி ஏ6 மாடலின் துவக்க விலை ரூ. 54.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2019 மாடலில் மேம்பட்ட அம்சங்கள், உள்புற மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதலாக புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஆடி ஏ6 மாடல் பார்க்க கூர்மையாகவும் முன்பை விட அதிக ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. அதன்படி காரின் முன்புறம் புதிய கிரில், மேம்பட்ட எல்.இ.டி ஹெட்லேம்ப்கள், புதிய பொனெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்துகிறது.

2019 ஆடி ஏ6 மாடலில் டூயல்-டோன் அலாய் வீல்கள், நீண்ட வீல்பேஸ், பிரீமியம் தோற்றம் பெற்றிருக்கிறது. ஏ6 காரின் பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் ஒற்றை க்ரோம் ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் முற்றிலும் மேம்பட்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது.



அதன்படி இரட்டை தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 4-சோன் கிளைமேட் கண்ட்ரோல், புதிய MMI இன்ஃபோடெயின்மென்ட் இன்டர்ஃபேஸ் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

என்ஜினை பொருத்தவரை 2019 ஆடி ஏ6 காரில் ஒற்றை பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 2.0 லிட்டர் TFSI யூனிட் ஆகும். இது 240 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பி.எஸ். 6 ரக என்ஜின் ஆகும். 

புதிய 2019 ஆடி ஏ6 கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.8 நொடிகளில் எட்டிவிடும்.
Tags:    

Similar News