ஆட்டோமொபைல்
லம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர்

லம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-10-11 10:11 GMT   |   Update On 2019-10-11 10:11 GMT
லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் இவோ ஸ்பைடர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் இவோ ஸ்பைடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.1 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டதோடு மும்பையில் புதிய விற்பனையகம் ஒன்றை லம்போர்கினி திறந்துள்ளது.

கூப் மாடலில் உள்ள என்ஜினே புதிய ஹரிகேன் இவோ ஸ்பைடர் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இதில் கன்வெர்டிபில் சாஃப்ட் டாப் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்டான்டர்டு மாடலை விட இதன் எடை 120 கிலோ அதிகம் ஆகும். கார் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது சாஃப்ட் டாப் ரூஃபினை 17 நொடிகளில் மூடிவிட முடியும்.



மேலும் லம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.1 நொடிகளில் எட்டும் திறன் கொண்டிருக்கிறது. இது கூப் மாடலை விட 0.2 நொடிகள் குறைவாகும். இதே காரில் மணிக்கு 0 முதல் 200 கிலோமீட்டர் வேகத்தை 9.3 நொடிகளில் எட்ட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கிலோமீட்டர்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர் மாடலிலும் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 631 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எம். மற்றும் 600 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். செயல்திறனை வழங்குகிறது. இத்துடன் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

காரின் உள்புறம் 8.4 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர டூயல் கேமரா டெலிமெட்ரி, டைனமிக் ஸ்டீரிங், ஆல்-வீல் ஸ்டீரிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News