ஆட்டோமொபைல்
டாடா டிகோர் இ.வி.

அதிக திறன் கொண்ட டாடா டிகோர் இ.வி. கார் அறிமுகம்

Published On 2019-10-10 09:49 GMT   |   Update On 2019-10-10 09:49 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிக தூரம் செல்லும் டிகோர் இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய டிகோர் இ.வி. முன்பை விட அதிக தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் டிகோர் இ.வி. இனி வணிகம் மற்றும் தனிப்பட்ட பயன்பாடு என இருதரப்பு வாடிக்கையாளர்களும் வாங்க முடியும். டிகோர் இ.வி. கார் துவக்க விலை ரூ. 9.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டிகோர் இ.வி. காருக்கு அரசாங்க சலுகைகளும் வழங்கப்படுகிறது.



ஏற்கனவே இந்தியாவில் டிகோர் இ.வி. கார் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. எனினும், இது அரசாங்கம் மற்றும் வணிக ரீதியிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வரிசையில் புதிய காரினை இனி தனிப்பட்ட வாடிக்கையாளர்களும் தங்களது சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிட முடியும்.

டாடா டிகோர் இ.வி. கார்: XE+, XM+ மற்றும் XT+ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களும் ஃபேம் 2 சலுகைகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரில் 21.5 கிலோவாட் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 213 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டிகோர் இ.வி. கார் டிரைவ் மற்றும் ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரி கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது. இது அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளிலும் செயல்திறனை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
Tags:    

Similar News