ஆட்டோமொபைல்
பஜாஜ் அர்பனைட்

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்யும் பஜாஜ்

Published On 2019-10-08 10:19 GMT   |   Update On 2019-10-08 10:19 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கால்பதிக்க இருக்கிறது. அக்டோபர் 16 ஆம் தேதி பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அர்பனைட் பிராண்டினை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

புதிய அர்பனைட் பிராண்டு பஜாஜ் ஆட்டோவின் புதிய அங்கமாக செயல்படும் என தெரிகிறது. இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர இரு தசாப்தங்களுக்கு பின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஸ்கூட்டர்கள் பிரிவில் களமிறங்க இருக்கிறது.

முன்னதாக பஜாஜ் நிறுவனத்தின் செடாக் ஸ்கூட்டர்கள் இந்தியா முழுக்க அதிக பிரபலமாக இருந்தன. இந்தியாவில் பஜாஜ் அர்பனைட் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் ஸ்கூட்டரின் வடிவமைப்பு, அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகின.

அர்பனைட் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் பிரீமியம் பிரிவில் அறிமுகமாகும் என்றும் இது ஒகினாவா, ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் எனர்ஜி போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் அர்பனைட் பற்றிய விவரங்கள் அக்டோபர் 16 ஆம் தேதி தெரியவரும்.
Tags:    

Similar News