ஆட்டோமொபைல்
ஹூன்டாய் எலான்ட்ரா

இந்தியாவில் புதிய ஹூன்டாய் எலான்ட்ரா கார் அறிமுகம்

Published On 2019-10-03 09:57 GMT   |   Update On 2019-10-03 09:57 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எலான்ட்ரா துவக்க விலை ரூ. 15.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய எலான்ட்ரா மாடலில் மேம்பட்ட வடிவமைப்பு, புதிய அம்சங்கள் மற்றும் என்ஜின் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வடிவமைப்பில் முன்புற கிரில் கேஸ்கேடிங் வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஹெட்லேம்ப் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முக்கோண வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப், புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் இருபுறங்களிலும் புதிய பம்ப்பர், மேம்பட்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ராப்-அரவுண்ட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் மேம்பட்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது. 



இதில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படுகின்றன.

இத்துடன் 10-வழிகளில் பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், முன்புற பார்க்கிங் சென்சார், ஹேன்ட்ஸ்-ஃப்ரீ டெயில்கேட், குரூஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., பின்புற பார்க்கிங் கேமரா, ஹை-ஸ்பீடு வார்னிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹூன்டாய் எலான்ட்ரா மாடலில் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 152 பி.ஹெச்.பி. பவர், 192 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News