ஆட்டோமொபைல்
பி.எம்.டபுள்.யூ. ஆர் 1250 ஆர்

புதிய பி.எம்.டபுள்.யூ. மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-09-25 10:07 GMT   |   Update On 2019-09-25 10:07 GMT
பி.எம்.டபுள்.யூ. மோட்டாராட் ஆர் 1250 ஆர் மற்றும் ஆர் 1250 ஆர்.டி. மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.



பி.எம்.டபுள்.யூ. மோட்டோராட் நிறுவனம் இந்தியாவில் ஆர் 1250 மற்றும் ஆர் 1250 ஆர்.டி. மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இரு மாடல்களின் விலை முறையே ரூ. 15.95 லட்சம் மற்றும் ரூ. 22.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புனேவில் உள்ள விற்பனையாளர்கள் பி.எம்.டபுள்.யூ. ஆர் 1250 ஆர் மற்றும் ஆர் 1250 ஆர்.டி. மோட்டார்சைக்கிள்களை ரூ. 3 லட்சம் விலையில் முன்பதிவு செய்கின்றனர். புதிய மோட்டார்சைக்கிளை பெற மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாடலுக்கு மொத்தம் ஐந்து மோட்டார்சைக்கிள்கள் கிடைக்கின்றன.

புதிய பி.எம்.டபுள்.யூ. ஆர் 1250 ஆர்.டி.: புளு பிளேனட் மெட்டாலிக் மற்றும் ஸ்பார்க்ளிங் ஸ்டாம் மெட்டாலிக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதில் பல்வேறு க்ரோம் அம்சங்கள் வாகனத்திற்கு வித்தியாச தோற்றம் பெற்றிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் இரு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.



இத்துடன் ஆட்டோமேடிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஏ.பி.எஸ்., கார்னெரிங் ஏ.பி.எஸ்., ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஹீட்டெட் சீட், சென்ட்ரல் லாக்கிங், டையர் பிரெஷர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஆன்டி-தெஃப்ட் அலாரம் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டிக்கு இரு மாடல்களிலும் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ப்ளூடூத், ரேடியோ சாஃப்ட்வேர், பி.எம்.டபுள்.யூ. மோட்டோராட் மல்டி கண்ட்ரோலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் ஆர் மாடலில் 6.5 இன்ச் ஸ்கிரீனும், ஆர்.டி. மாடலில் 5.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

பி.எம்.டபுள்.யூ. ஆர் 1250 ஆர் மற்றும் ஆர் 1250 ஆர்.டி. மாடல்களில் 1254சிசி 2-சிலிண்டர் இன்-லைன் பாக்சர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 134 பி.ஹெச்.பி. பவர், 143 என்.எம். டார்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கோல்டன் பிரேக் கேலிப்பர்கள், ரேடியேட்டர் கவர், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேன்க் கவர் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News