ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300

இந்தியாவில் எக்ஸ்.யு.வி.300 ஆட்டோமேடிக் வேரியண்ட் அறிமுகம்

Published On 2019-09-24 10:14 GMT   |   Update On 2019-09-24 10:14 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.300 எஸ்.யு.வி. மாடலின் டபுள்யூ6 டீசல் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 டீசல் வேரியண்ட் முன்னதாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் இதில் ஆட்டோஷிஃப்ட் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் உடன் எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 வேரியண்ட்டில் எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.



புதிய டிரான்ஸ்மிஷன் தவிர மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 வேரியண்ட் ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் உள்ள அம்சங்களை கொண்டிருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் 1.5-லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய டபுள்யூ6 வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இதே கார் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. 

இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகும். இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News