ஆட்டோமொபைல்
கே.டி.எம். டியூக் 790

கே.டி.எம். டியூக் 790 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-09-18 10:14 GMT   |   Update On 2019-09-18 10:14 GMT
கே.டி.எம். இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



கே.டி.எம். இந்தியா நிறுவனம் தனது டியூக் 790 மாடல் இந்தியாவில் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகமானதும் கே.டி.எம். நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக டியூக் 790 இருக்கும்.

புதிய டியூக் 790 மாடல் இந்திய நகரங்களில் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் மட்டுமே கிடைக்கும். புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் இதுவரை துவங்கப்படவில்லை. எனினும், சில விற்பனையாளர்கள் டியூக் 790 மாடலை ரூ. 30,000 கட்டணத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

கே.டி.எம். டியூக் 790 மாடலில் எலெக்டிராணிக் ரைடர் ஏய்டுகள், அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், லீன் ஆங்கில் சென்சிடிவிட்டி, மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், டிராக் மோட், குவிக் ஷிஃப்டர் பிளஸ் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன.



கே.டி.எம். டியூக் 790 மாடலில் 799சிசி லிக்விட் கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. @9000 ஆர்.பி.எம்., 87 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனிற்கு இருவழி குவிக் ஷிஃப்டர் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

டியூக் 790 மாடல்: ஸ்போர்ட்ஸ், ஸ்டிரீட், ரெயின் மற்றும் டிராக் என நான்கு வித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இதில் ஸ்டீல் ஃபிரேம் சேசிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்புறம் 43 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News